நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை பயிற்சி

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்நிலைகளில் இருந்து காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
இதில் வீட்டில் உள்ள பொருள்களான காலி பிளாஸ்டிக் குடம் மற்றும் குளிர்பான பாட்டில்கள், கேன்கள், காலி சமையல் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தண்ணீரில் மூழ்கியவரை மீட்பது குறித்து ஒத்திகை  செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்டு, அவருக்கு முதலுதவி அளித்து, காப்பாற்றுவது குறித்தும் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.வெங்கடேசன் கூறியது: வடகிழக்கு பருவமழை வருவதையொட்டி நீர்நிலைகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கும். 
தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தண்ணீரில் குளிக்க வருவர். 
பெற்றோர்கள் குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். போதுமான நீச்சல் பயிற்சி இல்லாமல், தெரியாத நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், மாவட்ட தீயணைப்பு தலைமை அலுவலர் கல்யாண சுந்தரம் அறிவுறுத்தலின்பேரில், பொதுமக்களுக்கு நீர்நிலைகளில் ஆபத்தில் இருப்பவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com