அழகர்கோவிலில் உணவுத் திருவிழா

அழகர்கோவிலில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையினர் ஒருங்கிணைந்து, பாரம்பரிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை நடத்தினர்


அழகர்கோவிலில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையினர் ஒருங்கிணைந்து, பாரம்பரிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை நடத்தினர். 
மேலூர் வட்டார சத்துணவுத் திட்டம் மற்றும் சமூகநலத் துறையினர் இணைந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து செயல்விளக்கக் கண்காட்சியை, அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளியில் நடத்தினர். நிகழ்ச்சியை, மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். 
இதில், மதுரை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி, மேலூர் ஒன்றிய அதிமுக செயலர் பொன்னுச்சாமி, மேலூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நூருல் அனிஷா, கொட்டாம்பட்டி ரதிதேவி மற்றும் சத்துணவுத் திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையொட்டி, பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், கீரை வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கருத்துக் காட்சியும் இடம்பெற்றிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com