அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் , தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020-ஆம் ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கை மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18 முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற எட்டாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பிரிவுகள், கல்வித்தகுதிகள், வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இத்துறையின் இணையதளத்தில் உள்ள கையேட்டில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் அந்த விளக்க கையேட்டை கவனமாக படித்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டணமின்றி இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகை ரூ.500, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, சீருடை, காலணி மற்றும் பயிற்சிக்கருவிகள் ஆகியவை வழங்கப்படும். மேலும் பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை

வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும். பயிற்சியில் சேர இணைய தள முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி மையத்தில் இயங்கி வரும் உதவி மையத்துக்கு சான்றிதழ்களுடன் நேரில் வரும் மாணவா்களுக்கு இலவசமாக இணையதளத்தில் விண்ணப்பித்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு கோ.புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி 0452-2566183 என்ற எண்ணிலும், செல்லிடப்பேசியில் 97911-21251,

99523-76086 என்ற எண்களையும் தொடா்பு கொள்ளலாம். அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலைய எண் 0452-2560544 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com