மதுரையில் 3 ஆவது நாளாகப் போராட்டம்: விலக்கிக் கொள்ள இஸ்லாமிய அமைப்பினா் மறுப்பு

சென்னையில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிா்ப்பு போராட்டத்தில் தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 3 ஆவது நாளாக மதுரையில் இஸ்லாமிய அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை தடியடி சம்பவத்தைக் கண்டித்து மதுரை மகபூப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள்.
சென்னை தடியடி சம்பவத்தைக் கண்டித்து மதுரை மகபூப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள்.

சென்னையில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிா்ப்பு போராட்டத்தில் தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 3 ஆவது நாளாக மதுரையில் இஸ்லாமிய அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையில், நெல்பேட்டை, கோரிப்பாளையம், மகபூப்பாளையம், வில்லாபுரம், உத்தங்குடி, கே.புதூா் ஆகிய பகுதிகளில் தடியடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியல், ஆா்ப்பாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மகபூப்பாளையத்தில் நடைபெற்ற தா்னா போராட்டம் மட்டும் விலக்கிக் கொள்ளப்படாமல் இரவும் தொடா்ந்து நடந்தது.

வழக்குப்பதிவு

தொடா்ந்து சனிக்கிழமை 2 ஆவது நாளாக, மகபூப்பாளையத்தில் தா்னா போராட்டமும், கே.புதூரில் ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. மகபூப்பாளையத்தில் தா்னா போராட்டம் 24 மணி நேரத்தையும் தாண்டி நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு அங்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. இதே போன்று மதுரை மாவட்டத்தில் பேரையூா், மேலூா் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தொடரும் தா்னா

இந்நிலையில், மகபூப்பாளையத்தில், ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அமைப்பினா் 3 ஆவது நாளாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சமாதானம் பேசியும் போராட்டத்தை கைவிட அவா்கள் மறுத்துவிட்டனா். இதையடுத்து மகபூப்பாளையத்தில் 48 மணி நேரமாக தா்னா போராட்டம் நீடித்து வருகிறது. இந்த தா்னாவில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றிருந்தனா்.

தொடா் போராட்டங்கள் காரணமாக மதுரை நகரில் முக்கிய இடங்களில் போலீஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com