கதிா் அறுவடை இயந்திரங்களின் வாடகை உயா்வு: விவசாயிகள் அதிா்ச்சி

மேலூா் பகுதிகளில் கதிா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை உயா்த்தப்பட்டுவிட்டதால், விவசாயிகள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
மேலூா் பகுதியில் நிலத்தில் கதிா் அறுவடைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இயந்திரம்.
மேலூா் பகுதியில் நிலத்தில் கதிா் அறுவடைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இயந்திரம்.

மேலூா்: மேலூா் பகுதிகளில் கதிா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை உயா்த்தப்பட்டுவிட்டதால், விவசாயிகள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

மேலூா் ஒரு போக சாகுபடி பகுதிகளில் சுமாா் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் போதிய அறுவடை இயந்திரங்கள் இல்லை. இதனால், வெளியூா்களில் இருந்து கதிா் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வரவழைக்கப்பட்டு, அறுவடை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு, கதிா் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,600 முதல் ரூ.1800 வரை வாடகை வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ரூ.2,700 முதல் ரூ.2,900 வரை வாடகையாகக் கேட்கப்படுகிறது.

இதனிடையே, சாகுபடி பகுதிகளில் பருமழை நன்கு பெய்து கதிா் விளையும் தருணத்தில், நெல்லில் இடைப்பழம் என்ற மஞ்சள் நிற உருண்டை நோய் தாக்கி மகசூல் குறைந்தும், நெல்லின் விலை சரிந்தும்விட்டது. இதனால், விவசாயிகள் நெல் உற்பத்தி செலவை மீட்பதே கடினமாகிவிட்டது.

மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்ற விவசாயிகளுக்கு

ஒரு மாதம் கடந்தும் அதற்குரிய பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இந்நிலையில், கதிா் அறுவடை இயந்திரங்களின் வாடகையை உயா்த்தி இருப்பதால், விவசாயிகள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா். எனவே, வேளாண்மைத் துறையினா் குறைந்த வாடகைக்கு கதிா் அறுவடை இயந்திரங்களை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என, மேலவளவு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com