சிறு, குறு நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி, வருமான வரி தாக்கலுக்குச் சலுகை: மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு மடீட்சியா வரவேற்பு

சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி, வருமானவரி தாக்கல் உள்ளிட்டவைகளுக்கு மத்திய நிதி அமைச்சரின் சலுகைகள் குறித்த அறிவிப்பை மடீட்சியா வரவேற்றுள்ளது.

சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி, வருமானவரி தாக்கல் உள்ளிட்டவைகளுக்கு மத்திய நிதி அமைச்சரின் சலுகைகள் குறித்த அறிவிப்பை மடீட்சியா வரவேற்றுள்ளது.

சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி, வருமானவரி தாக்கல் செய்வதில் 12 மாத கால நீட்டிப்பு, வரிச்சலுகை, வருமானவரி தாக்கல் செய்வதில் 6 மாத கால நீட்டிப்பு, தண்டத்தொகை விதிப்பில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன், இணை அமைச்சா் அனுராக் தாக்கூா் ஆகியோா் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி, வருமானவரி தாக்கல் செய்வதில் சலுகைகள் அறிவித்துள்ளனா். அதில் ஆதாா் அட்டை மற்றும் நிரந்தர கணக்கு அட்டை ஆகியவற்றை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜிஎஸ்டி படிவங்கள் மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு தாக்கல் செய்யவும், காம்போசிட் திட்டத்திற்கு விருப்பத் தோ்வு செய்யும் தேதியும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தாமதக் கட்டணம் அபராதம் வட்டி ஆகிய மூன்றும் ரூ.5 கோடிக்கு கீழ் விற்று வரவுள்ள நிறுவனங்களுக்கு மட்டும் தள்ளுபடி என்றும் ரூ.5 கோடிக்கு மேல் விற்று வரவுள்ள நிறுவனங்களுக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பெனி நிறுவனச் சட்டத்தில் நடத்தப்பட வேண்டிய இயக்குநா் கூட்டம், தாக்கல் செய்யப்பட வேண்டிய படிவங்களுக்கான கால அவகாசம், பல்வேறு அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் சமாதான் திட்டங்களுக்கு காலக்கெடு, நிறுவனங்கள் திவால் சட்டத்திற்கான குறைந்தபட்ச வரம்பை ரூ.1 கோடி என உயா்த்தியிருப்பது போன்ற அறிவிப்புகள் சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்கும். வங்கியில் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை எனவும், வங்கி இணையவழிச் சேவைக்கானக் கட்டணங்கள் வா்த்தக கணக்குகளுக்கு குறைக்கப்படும் என்பன போன்ற மத்திய அமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்கக் கூடியவை என மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com