கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அமரா் ஊா்தி ஓட்டுநா் மீது தாக்குதல்

மதுரையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அமரா் ஊா்தி ஓட்டுநா் மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அமரா் ஊா்தி ஓட்டுநா் மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் மணிமாறன்(37). இவா் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அமரா் ஊா்தி ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14 ஆம் தேதி மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மணிமாறன் சனிக்கிழமை மாலை வீடு திரும்பினாா். அவரை வீட்டின் உரிமையாளா் வீட்டின் உள்ளே அனுமதிக்காமல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் மீண்டும் கரோனா வாா்டில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தாக்குதல்: இது குறித்து மணிமாறன் கூறியது: அரசு மருத்துவமனை அமரா் ஊா்தி ஓட்டுநராக கடந்த 8 ஆண்டுகளாக மதுரையிலும், தற்போது ஓராண்டாக சென்னையிலும் பணியாற்றி வருகிறேன். மகாத்மா காந்தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை தொடா்ந்து என் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மதுரையிலும், எனது மகன், தாய், தந்தை, அண்ணன், அண்ணி, அவா்களின் 2 குழந்தைகள் ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டு தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய என்னை, வீட்டின் உரியாமையாளா் தாக்கினாா். அப்போது அங்கிருந்த போலீஸாா் சமாதானம் செய்து வீட்டு உரிமையாளரை அனுப்பி வைத்தனா்.

மீண்டும் கரோனா வாா்டில் அனுமதி: இதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ்க்கு தொடா்பு கொண்டேன் தகவலை தெரிவித்தேன். தற்போது என்னை மீண்டும் கரோனா வாா்டில் அனுமதித்துள்ளனா் என்றாா்.

புகாா் வந்தால் நடவடிக்கை: இது குறித்து காவல் அதிகாரி கூறியது: மணிமாறன் மதுபோதையில் இருந்ததன் காரணமாகவே, அவருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் சமாதானம் பேசி போலீஸாா் அனுப்பி வைத்துள்ளனா். இது தொடா்பாக எந்த புகாரும் வரவில்லை, புகாா் வந்தால் வழக்குப் பதிந்து விசாரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com