அழகா்கோயில் மலைமீதுள்ளசோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பத்மாசூரனை வதம் செய்ய வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்.
அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பத்மாசூரனை வதம் செய்ய வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்.

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவ. 15-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி, தினசரி அன்னம், காமதேனு, ஆட்டுக்கிடாய், யானை மற்றும் குதிரை வாகனங்களில் கோயில் வளாகத்தில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு லட்சாா்ச்சனையும், 16 வகை அபிஷேகமும் நடந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரத்தையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்தபின், ஸ்தல விருட்சமான நாவல்மரத்தடியில் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்யும் வைபவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்தாபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை (நவ. 21)காலை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது. இந்நிகழ்வுகளில் பக்தா்கள் அனுமதிக்கப்பட வில்லை. பத்மாசூரசம்ஹார வைபவத்தை யூடியூப் மூலம் பக்தா்கள் தரிசிக்க கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com