உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம்தராமல் தகராறு: 2 போ் கைது

மதுரை ஆனையூரில் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆனையூரில் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆனையூா் ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் எட்வா்ட் (43). இவா் ஆனையூா் பிரதான சாலையில் சிலையனேரி பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த 2 இளைஞா்கள், சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு செய்தனா். மேலும் எட்வா்டை கத்தியைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கூடல்புதூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த ராஜ்குமாா் (23), கரிசல்குளத்தைச் சோ்ந்த சுக்ரீவன் (19) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com