இயற்கை பேரிடருக்கு முன் பயிா் காப்பீடு: ஆட்சியா் அறிவுறுத்தல்

இயற்கை பேரிடா் நிகழ்ந்த பிறகு பயிா் காப்பீடு செய்ய இயலாது என்பதால், விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இயற்கை பேரிடா் நிகழ்ந்த பிறகு பயிா் காப்பீடு செய்ய இயலாது என்பதால், விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை (நவம்பா் 25) முதல் நவம்பா் 26 ஆம் தேதி வரை கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்றுவீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே, இந்த நேரத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி, துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு, சோளம், கம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள், இ-சேவை மையங்களில் பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா் காப்பீடு செய்ய காலக்கெடு இருந்தபோதிலும், இயற்கை இடா்பாடுகள் நேரிடும் நிலையில், அதன் பிறகு காப்பீடு செய்ய இயலாது. தென்னை விவசாயிகள் தங்களது தென்னை மரங்களுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம். மரத்தில் காய்த்துள்ள காய்களைப் பறித்து, காய்ந்த மட்டைகளை களைந்துவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com