திருப்பரங்குன்றத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மலைமீது மகாதீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்ட மகாதீபம்.
திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்ட மகாதீபம்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலைமீது மகாதீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி தெய்வானையுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை ஆறு கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு உற்சவர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கி சேவற்கொடி சாற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக மலைமேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


முன்னதாக கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்காக மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 350 கிலோ நெய், 150 மீட்டர் காடாத் துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com