மதுரை ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு நாடகம்

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சாா்பில் நாடகம் நடத்தி திங்கள்கிழமை இரவு பயணிகளுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
மதுரை ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் ரயில்வே பாதுகாப்புப் படையினா்.

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சாா்பில் நாடகம் நடத்தி திங்கள்கிழமை இரவு பயணிகளுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். ரயில் நிலையம் மற்றும் ரயில் பெட்டிகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் கரோனா விழிப்புணா்வு முகாம்கள் நடத்த ரயில்வே பாதுகாப்புப் படையில் குழு அமைக்கப்பட்டன. இக்குழுவினா் மதுரை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு பாடல்கள் பாடியும், நாடகம் நடத்தியும் ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: சிறப்பு ரயில்களில் பயணிப்போரின் பாதுகாப்பிற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரயில் நிலையம் மற்றும் பெட்டிகள், கழிப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளோம். தற்போது மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகா், ராமேசுவரம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் விழிப்புணா்வு நாடகங்களையும் நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com