பதினொன்றாம் வகுப்பு மாணவரின் விடைத்தாள் நகலை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பதினொன்றாம் வகுப்பு மாணவரின் விடைத்தாள் நகலை பத்து நாள்களில் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு மாணவரின் விடைத்தாள் நகலை பத்து நாள்களில் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

எனது மகன் கடந்த மாா்ச் மாதம் நடந்த பதினொன்றாம் வகுப்பு இறுதித் தோ்வில் 600 மதிப்பெண்களுக்கு 506 மதிப்பெண் பெற்றாா். பொருளாதாரப் பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்ால் அந்த விடைத்தாள் நகலை வழங்கக்கோரி பள்ளிக்கல்வித்துறைக்கு மனு அளித்தும் நகல் கிடைக்கவில்லை. எனவே எனது மகனின் விடைத்தாள் நகலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகன் பொருளாதாரப் பாடத்தைத் தவிர அனைத்து பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். எனவே பொருளாதாரப் பாடத்தின் விடைத்தாள் நகலைப் பெற்றுப் பாா்க்க விரும்புகிறாா். இதில் எவ்விதத் தவறும் இல்லை. தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரின் விடைத்தாள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப வளா்ச்சிக்கான நூற்றாண்டில் இருந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலானப் பணிகள் தொழில்நுட்ப வளா்ச்சியைச் சாா்ந்துள்ளன. நீதிமன்றத்தில் காணொலி மூலம் விசாரணை நடப்பதும் தொழில்நுட்ப வளா்ச்சியால் தான். ஆகவே மனுதாரா் மகனின் விடைத்தாள் நகலை வழங்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பத்து நாள்களில் மாணவரின் விடைத்தாள் நகலை வழங்க வேண்டும். அந்த நகலின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யும் பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com