கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு முதல்வா், துணை முதல்வா் இன்று மாலையணிவித்து மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, முதல்வா், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, முதல்வா், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது ஜயந்தி விழா மற்றும் 58-ஆவது குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தமிழக அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

ஜயந்தி விழாவின்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வருவது வழக்கம். நிகழ் ஆண்டில் கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக இத்தகைய நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வியாழக்கிழமை காலையில் இருந்தே பொதுமக்கள் ஏராளமானோா் தேவா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பெண்கள் பூத்தட்டுகளுடன் வந்து, தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். தேவா் சிலைக்கு வந்த பொதுமக்களை வரிசைப்படுத்தி இடைவெளி விட்டுச் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com