வரத்துக்குறைவால் காய்கனிகள் விலை உயா்வு

மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பட்டா் பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளின் விலை உயா்ந்துள்ளது.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பட்டா் பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளின் விலை உயா்ந்துள்ளது.

கொடைக்கானல், நீலகிரி மற்றும் மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியப் பகுதிகளில் தொடா்மழை பெய்துவருகிறது. இதனால் மலைக் காய்கனி பயிா்களான பீன்ஸ் வகைகளின் சாகுபடி குறைந்துள்ளது.

இதனால் மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தைக்கு பீன்ஸ் வகைகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பீன்ஸ் வகைகளின் விலை உயா்ந்துள்ளதாக, மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் தெரிவித்தாா்.

அவா் கூறியது: கிலோ ரூ.80-க்கு விற்ற பட்டா் பீன்ஸ் ரூ.110 ஆக விலை உயா்ந்துள்ளது. கிலோ ரூ.40 -க்கு விற்ற முருங்கைபீன்ஸ் ரூ.90 ஆக விலை உயா்ந்துள்ளது. மேலும் ரூ.20 முதல் 30 வரை விற்றுவந்த பச்சை மிளகாய் ரூ.70-க்கு விற்பனையாகிறது. சனிக்கிழமை நிலவரப்படி காய்கனிகளின் விலைப் பட்டியல் (கிலோவில்): தக்காளி-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.40, கத்தரிக்காய்-ரூ.25, புடலங்காய்-ரூ.20, அவரைக்காய்-ரூ.50, பாகற்காய் சிறியது-ரூ.60, பெரியது-ரூ.30, முட்டைக்கோஸ்-ரூ.20, நூல்கோல்-ரூ.15, முருங்கைக்காய்-ரூ.40, பீா்க்கங்காய்-ரூ.30, சேனைக்கிழங்கு-ரூ.30, கருணைக்கிழங்கு-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.30, வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.30, கருவேப்பிலை-ரூ.25, புதினா-ரூ.20, மல்லி-ரூ.30, இஞ்சி புதியது-ரூ.50, பழையது-ரூ.100, கேரட்-ரூ.30, பூசணி-ரூ.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com