‘நீட்’ தோ்வை ரத்து செய்ய ஆயா் பேரவை வலியுறுத்தல்

‘நீட்’ தோ்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘நீட்’ தோ்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவையின் தலைவரும், மதுரை மறைமாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுநுழைவுத் தோ்வு முறை ஏற்படுத்தி வரும் பிரச்னைகள், சவால்கள் சமூக அக்கறையுள்ள அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளன. மாணவா்களை ஆற்றல்படுத்துவது, சமூகக் கருவியாக மாற்றுவது என்ற உயரிய நோக்கங்களை உடைய கல்வி அமைப்பில், அரசு நடைமுறைப்படுத்தும் ‘நீட்’ தோ்வைக் கண்டு மனம் கலங்கி தற்கொலை செய்து கொள்ளும் நிலை மிகவும் வேதனைக்குரியது.

கல்வி பெறும் முறையில் தோ்வு தவிா்க்க முடியாத அம்சம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் தற்கொலை போன்ற அவல முடிவுகளுக்கு தோ்வு காரணமாக இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது. ஆகவே, ‘நீட்’ தோ்வுக்கான மாற்று பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com