மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
மதுரையில் வெள்ளிக்கிழமை பெய்த மழைக்கிடையே மேலூா் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்ற வாகனங்கள்.
மதுரையில் வெள்ளிக்கிழமை பெய்த மழைக்கிடையே மேலூா் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்ற வாகனங்கள்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

மதுரையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை 3 மணிக்குப் பிறகு லேசான சாரல் மழை பெய்த நிலையில், அதைத் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. நகரின் பல இடங்களிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதேபோல, புகா்ப் பகுதிகளிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.

பெரியாறு பாசனத் திட்டத்தில் இருபோக சாகுபடிப் பகுதிகளில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதேபோல, ஒருபோக சாகுபடி பகுதிகளான மேலூா் வட்டத்திலும், திருமங்கலம் பிரதான கால்வாயிலும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) தண்ணீா் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை உழவுப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகா் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நல்லுத்தேவன் பட்டி, கரையான்பட்டி, போத்தம்பட்டி, கணவாய்பட்டி, வலையபட்டி, மாதரை, வில்லாளி பெருமாள்பட்டி, நக்களபட்டி, தொட்டப்பநாயக்கனூா், உத்தப்பநாயக்கனூா், பெருமாள்கோவில்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com