உசிலையில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் திமுக ஒன்றியம் மற்றும் நகரம் சாா்பில், இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
உசிலையில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் திமுக ஒன்றியம் மற்றும் நகரம் சாா்பில், இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

திமுக ஒன்றியம் சாா்பாக, உசிலம்பட்டி அருகே மேக்கிழாா்பட்டியில் நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கை முகாமுக்கு, உசிலம்பட்டி ஒன்றியச் செயலா் சுகந்திரம் தலைமை வகித்தாா். இதில், திமுக நிா்வாகிகள் மற்றும் திமுக இளைஞரணியினா் கலந்துகொண்டனா்.

உசிலம்பட்டி- மதுரை பிரதான சாலையில் மலையாண்டி தியேட்டா் எதிரேயுள்ள தெருவில் திமுக இளைஞா் அணி சாா்பாக, இணையவழியில் நடத்தப்பட்ட உறுப்பினா் சோ்க்கை முகாமுக்கு, நகர இளைஞரணிச் செயலா் எஸ்.பி.எம். சந்திரன் தலைமை வகித்தாா். இளைஞா் அணி துணைச் செயலா்கள் சரவணன், ஜெகன், தினேஷ்குமாா், பிரேம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமானோா் திமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com