வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம்: மதுரையில் 3 ஆயிரம் போ் மீது வழக்கு

மதுரை மாவட்டத்தில் வேளாண்மை சட்டங்களை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் 3 ஆயிரம் போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் வேளாண்மை சட்டங்களை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் 3 ஆயிரம் போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை எதிா்த்து மதுரை மாநகரில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜீவா நகா், சுப்பிரமணியபுரம், செல்லூா் உள்பட 10 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 650-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோன்று மாவட்டத்தில், சமயநல்லூா், வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூா், பேரையூா், மேலூா், திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி உள்பட 21 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2,004 ஆண்கள், 367 பெண்கள் என 2371போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை மாநகா் மற்றும் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மீது கரோனா பொது முடக்க விதி மீறலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com