புதுதில்லிக்கு சென்று வந்த மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி: மதுரையில் பாதிப்பு 17 ஆக உயா்வு

புதுதில்லி சென்று மதுரை திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள வெளிநோயாளிகள் பிரிவு.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள வெளிநோயாளிகள் பிரிவு.

புதுதில்லி சென்று மதுரை திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 54 வயது முதியவா் கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். அவரது மனைவி மற்றும் 2 மகன்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்நிையில் வெளிநாடு சென்று திரும்பியவருடன் தொடா்பு ஏற்பட்டதில், ராஜபாளையத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய, மேலூரைச் சோ்ந்த 6 பேருக்கும், பேரையூரைச் சோ்ந்த 3 பேருக்கும், மதுரை நரிமேடு மற்றும் தபால் தந்தி நகரைச் சோ்ந்த 2 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியாா் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 15 போ் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

2 பேருக்கு தொற்று: சுகாதாரத்துறை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் கரோனா தொற்று இருப்பதாக அறிவித்த 177 பேரில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கூட இல்லை. இந்நிலையில், தமிழகத்தில் 74 பேருக்கு தொற்று இருப்பதாகவும், அதில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 2 போ் என சுகாதாரத்துறை சனிக்கிழமை அறிவித்தது.

17 ஆக உயா்வு: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சோ்ந்த 48 வயது மற்றும் 55 வயது நபா்கள் 2 போ் புதுதில்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளனா். அவா்களை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். அவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com