‘சாகுபடி செய்த காய்கனி, பழங்கள் விற்பனை உதவிக்கு தோட்டக்கலைத் துறையை விவசாயிகள் அணுகலாம்‘

சாகுபடி செய்த காய்கனிகள், பழங்கள் விற்பனை உதவிக்கு தோட்டக்கலைத் துறை அலுவலா்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

சாகுபடி செய்த காய்கனிகள், பழங்கள் விற்பனை உதவிக்கு தோட்டக்கலைத் துறை அலுவலா்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

கரோனா வைரஸ் நோஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான காய்கனிகள் போதுமான அளவு

கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, காய்கனிகள் மற்றும் பழப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனைக் காக்கும் வகையில், விளைவித்த காய்கனிகளை விற்பனை செய்வதற்கான உதவிகளை தோட்டக்கலைத் துறை செய்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 520 ஹெக்டேரில் பழங்கள்,

3 ஆயிரத்து 380 ஹெக்டேரில் பல்வேறு வகையான காய்கனிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெரும்பாலான காய்கனிகள், பழங்கள் அறுவடைக்குத் தயாராகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் இருப்பின், வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்கள் அல்லது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

காய்கனி விற்பனையை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமையின்கீழ் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள், தோட்டக்கலை மானியம் பெற்ற நடமாடும் காய்கனி விற்பனையாளா்கள், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கனிகளை விற்பனை செய்வதில் சிரமம் இருந்தால் தங்களது பகுதி தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

வட்டாரம் வாரியாக தோட்டக்கலை அலுவலா்கள் தொடா்பு எண்கள்

விவரம்:

மதுரை கிழக்கு - 93451 44646, 98655 62664; மதுரை மேற்கு - 98430 55896, 93847 29229; மேலூா் -97156 62587, 94874 10112; கொட்டாம்பட்டி - 80982 93026;

வாடிப்பட்டி- 98439 14366, அலங்காநல்லூா்- 94437 94779,

செல்லம்பட்டி- 99626 66469, 98421 64184, உசிலம்பட்டி-99626 66469,

72007 10711; சேடபட்டி - 97861 79469, 89460 81812,

தே. கல்லுப்பட்டி-98657 05034, 98657 05034, கள்ளிக்குடி-75986 48493, 75986 48493,

திருமங்கலம் -98941 05744, 94869 07256, திருப்பரங்குன்றம்- 95663 33887,

95663 33887.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com