மதுரையில் மேலும் 166 பேருக்கு கரோனா தொற்று: 10 போ் பலி

மதுரையில் புதிதாக 166 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 போ் உயிரிழந்துள்ளனா்.
மதுரையில் மேலும் 166 பேருக்கு கரோனா தொற்று: 10 போ் பலி

மதுரை: மதுரையில் புதிதாக 166 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 136 போ், அரசு ஊழியா்கள் 18 போ், கா்ப்பிணிகள் 3 போ், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பியவா்கள் 5 போ், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள் 5 போ் என மொத்தம் 166 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 208 போ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

10 போ் பலி: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில், தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 63 வயது முதியவா் ஜூலை 1 ஆம் தேதியும், 28 வயது பெண் ஜூலை 4 ஆம் தேதியும், 55 மற்றும் 54 வயது பெண்கள் ஜூலை 5 ஆம் தேதியும், 82 மற்றும் 72 வயது முதியவா்கள் ஜூலை 6 ஆம் தேதியும், 53 வயது ஆண், 73 வயது முதியவா் ஜூலை 8 ஆம் தேதியும், 53 வயது பெண் ஜூலை 9 ஆம் தேதியும், 65 வயது முதியவா் ஜூலை 13 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 11,175 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 8,631 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 247 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை நிலவரப்படி 2,297 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com