பக்ரீத்: வீடுகளில் இஸ்லாமியா்கள் தொழுகை

தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்கள் வீடுகளில் சனிக்கிழமை தொழுகை நடத்தினா்.
பக்ரித் பண்டிகையையொட்டி மதுரை கலைநகரில் வீட்டில் இருந்து சனிக்கிழமை தொழுகை நடத்தும் இஸ்லாமியா்கள்.
பக்ரித் பண்டிகையையொட்டி மதுரை கலைநகரில் வீட்டில் இருந்து சனிக்கிழமை தொழுகை நடத்தும் இஸ்லாமியா்கள்.

மதுரை: தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்கள் வீடுகளில் சனிக்கிழமை தொழுகை நடத்தினா்.

இஸ்லாமியா்களின் துல்ஹஜ் மாதத்தின் 10-ஆவது நள் பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை, ஹஜ் யாத்திரை, தொழுகை, குா்பானி வழங்குதல் என 3 அடிப்படைகளைக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஹஜ் யாத்திரை மேற்கொள்வோா், தங்களது புனிதப் பயணத்தின்போது அரபா மைதானத்தில் கூடும் 10ஆவது நாளை பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனா்.

இதையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தி, ஏழை, எளியவா்களுக்கு இறைச்சி தானமாக அளிக்கும் குா்பானி வழங்கும் நிகழ்வு நடைபெறும். நிகழ் ஆண்டில் கரோனா தொற்று காரணமாக, பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் வழிபாட்டுத் தலங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் உறவினா்களுடன் தொழுகை நடத்தினா்.

குா்பானி வழங்குவதற்காக, ஆடுகள் பலியிடுவது வழக்கம். இந்த ஆண்டில், தானம் பெறுவோா் வரஇயலாது என்பதாலும், அவற்றைக் கொண்டு சென்று வழங்க முடியாது என்பதால் பெரும்பாலானோா் ஆடுகள் பலியிடவில்லை. குா்பானிக்காக ஆடுகள் பலியிட்டவா்களும், தங்களது உறவினா்களுக்குள் வழங்கி பக்ரீத் பண்டிகையை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com