மதுரை மாவட்டத்தில் மேலும் 109 பேருக்குகரோனா தொற்று உறுதி
By DIN | Published On : 07th August 2020 11:57 PM | Last Updated : 07th August 2020 11:57 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,880 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் புதிதாக 109 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே தொற்று இருப்பவா்களிடம் இருந்து பாதிப்பு ஏற்பட்டவா்கள் 52 போ், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு காரணமாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவா்கள் 31 போ், முன்களப் பணியாளா்கள் 7 போ், கா்ப்பிணிகள் இருவா், வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உள்பட 109 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,797 ஆக உயா்ந்துள்ளது. இதில் 9,733 போ் குணமடைந்துள்ளனா். 278 போ் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 1,786 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 267 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதில் 204 போ் அரசு மருத்துவமனையிலும், 57 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்கள்.
கரோனா பாதிப்புடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 44 வயது ஆண் மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவா் ஆகியோா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனா்.