‘இ-பாஸ்’ நடைமுறை தொடருவது ஏன்: முதல்வா் விளக்கம்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, ‘இ-பாஸ்’ நடைமுறை போன்ற கட்டுப்பாடுகள் அவசியமானது என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, ‘இ-பாஸ்’ நடைமுறை போன்ற கட்டுப்பாடுகள் அவசியமானது என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

‘இ-பாஸ்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்படுவது குறித்து கேட்டதற்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

‘இ-பாஸ்’ போன்ற கட்டுப்பாடு இருப்பதால் தான் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைக்காக வெளிமாவட்டங்களுக்குப் பயணம் செய்வதற்காக மட்டுமே ‘இ-பாஸ்’ நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக அவசியம் இல்லாத பயணங்களை மேற்கொள்வதற்காகவும் ‘இ-பாஸ்’ கோரி விண்ணப்பிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் சூழலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கரோனா தொற்று உலகிற்கே புதுவகையான நோய். எந்தெந்த வகைகளில் அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ‘இ-பாஸ்’ நடைமுறை மக்களைக் கஷ்டப்படுத்துவதற்காக அல்ல. ஆகவே, அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் ‘இ-பாஸ்’ பெற விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, தொழில் துறையினருக்கும் தேவைக்கேற்ப ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது. எளிமையான முறையில் ‘இ-பாஸ்’ கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ‘இ-பாஸ்’ வழங்குவதில் எவ்வித ஊழலுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிக்காக கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com