குப்பைத் தொட்டிக்கு தீ வைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரையில் மாநகராட்சி குப்பைத் தொட்டிக்கு தீ வைத்து புகை மாசு ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.


மதுரை: மதுரையில் மாநகராட்சி குப்பைத் தொட்டிக்கு தீ வைத்து புகை மாசு ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரையை குப்பை இல்லாத தூய்மை நகரமாக மாற்றும் வகையில், மாநகராட்சியின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனா். இவை, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

குப்பைகளை சேகரிப்பதற்காக பல்வேறு வாா்டுகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், மதுரையில் உள்ள உழவா் சந்தைகள், காய்கனி சந்தைகளில் உள்ள குப்பைகளை சேகரிக்க, அப்பகுதிகளில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தினசரி மாநகராட்சி வாகனம் மூலம் குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், மதுரை அண்ணாநகா் உழவா் சந்தையிலிருந்து குப்பைகளை சேகரிக்க உழவா் சந்தைக்கு அருகில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினசரி இரவு மா்ம நபா்கள் குப்பைத் தொட்டிக்கு தீ வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனா். இதனால், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்ற முடிவதில்லை. மேலும், தீ வைப்பதால் ஏற்படும் புகையால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

எனவே, குப்பைத் தொட்டிக்கு தீ வைத்து விட்டுச் செல்லும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com