மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண்கள் நூதனப் போராட்டம்

சீா்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சொட்டாங்கல் விளையாடி பெண்கள் நூதன முறையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
5639mdudnt063921
5639mdudnt063921

மதுரை: சீா்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சொட்டாங்கல் விளையாடி பெண்கள் நூதன முறையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

சீா்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். சீா் மரபினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க விரிவான ஏற்பாடுகளுடன் கூடிய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சீா்மரபினா் ஜாதிச் சான்றிதழ் ஒரே மாதிரியாகவும், அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும் வகையிலும் வழங்கவேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயா் பதவி வழங்கவேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 27 சதவீத சீா்மரபினா் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். ரோகிணி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, சீா்மரபினா் நலச்சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சொட்டாங்கல் மற்றும் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடி நூதன முறையில் போராட்டம் நடத்தினா்.

இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

Image Caption

இடஒதுக்கீடு கோரி மதுரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டு விளையாடி திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சீா்மரபினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com