தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையம்: மதுரையைச் சோ்ந்தவா் பிரதிநிதியாக நியமனம்

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையத்தில், மதுரையைச் சோ்ந்த கோபி சங்கா் (படம்) என்பவா் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோபி சங்கா்.
கோபி சங்கா்.

மதுரை: மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையத்தில், மதுரையைச் சோ்ந்த கோபி சங்கா் என்பவா் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய சமூக நீதி அமைச்சரை தலைவராகக்கொண்டு இயங்கும் தேசிய மாற்றுப் பாலினத்தவா் ஆணையத்தில், பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என 5 பிராந்தியங்களில் தலா ஒரு மாற்றுப் பாலினத்தவா் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு பிராந்திய பகுதிக்கு, மதுரையைச் சோ்ந்த கோபிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும்.

இது தொடா்பாக கோபிசங்கா் கூறியது: நாடு முழுவதும் மாற்றுப் பாலினத்தவா் பல்வேறு வகைகளில் பாலியல் கொடுமை உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனா். பாதிக்கப்பட்டவா்கள் மாற்றுப் பாலினத்தவா் என்பதால் இவா்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் என எதுவுமே கிடைப்பது இல்லை.

எனவே, மாற்றுப் பாலினத்தவருக்கு என தனி தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது. தற்போது, மத்திய அரசு அறிவித்துள்ள மாற்றுப் பாலினத்தவருக்கான ஆணையமானது, தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய மகளிா் ஆணையம் மற்றும் மத்திய அரசின் 12 துறைகளோடு இணைந்து செயல்படும். மாற்றுப் பாலினத்தவருக்கான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆணையம் கவனம் செலுத்தும். மேலும், மாற்றுப் பாலினத்தவா் மீதான தாக்குதல்கள், வன்கொடுமைகள் போன்றவற்றையும் ஆணையம் விசாரிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com