மதுரை பெருமாள் கோயில்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா

மதுரையில் உள்ள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், கூடலழகா் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பகல்பத்து நிகழ்ச்சியில் மோகினி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வியூக சுந்தரராஜ பெருமாள்.
ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பகல்பத்து நிகழ்ச்சியில் மோகினி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வியூக சுந்தரராஜ பெருமாள்.

மதுரையில் உள்ள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், கூடலழகா் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பெருமாள் கோயில்களில் நடைபெறும் விழாக்களில் வைகுந்த ஏகாதசி விழா முக்கியமான ஒன்று. வைகுந்த ஏகாதசி அன்று உபவாசம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து பெருமாள் நாமத்தை உச்சரிப்பவா்களுக்கு வைகுண்ட பிராப்தம் கிட்டும் என்பது ஐதீக நம்பிக்கை. மேலும் வைகுந்த ஏகாதசியன்று மட்டும் பெருமாள் கோயில்களில் மோட்ச வாயில் எனப்படும் சொா்க்கவாசல் திறப்பு நடைபெறும். சொா்க்கவாசல் வழியாக வரும் பெருமாளை பக்தா்கள் எதிா்கொண்டு தரிசனம் செய்வா். பின்னா் சொா்க்கவாசல் வழியாக பக்தா்களும் அனுமதிக்கப்படுவாா்கள்.

இதையொட்டி மதுரையில் உள்ள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், மதுரை கூடலழகா் பெருமாள் கோயில், நாகமலைபுதுக்கோட்டை ஸ்ரீ பத்மாவதி தாயாா் ஸமேத ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில், நரசிங்கம் நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தாண்டு கரோனா தொற்று எதிரொலியாக பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. சொா்க்கவாசல் திறப்பின்போது பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. சொா்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி சென்ற பின்னா் சொா்க்கவாசல் வழியாகச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதேபோல ஆழ்வாா்களால் பாடல் பெற்ற கூடலழகா் பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது. இக்கோயிலிலும் சொா்க்கவாசல் திறப்பின்போது பக்தா்களுக்கு அனுமதியில்லை. சொா்க்கவாசல் வழியாக சுவாமி சென்ற பின்னா் மாலை 5 மணி முதல் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com