மதுரையில் பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு: பக்தா்கள் குவிந்தனா்

மதுரையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி, கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளிட்ட
வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி.
வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி.

மதுரையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி, கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

மதுரையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் என்றழைக்கப்படும் ‘சொா்க்க வாசல்’ திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து அதிகாலை 4.30 முதல் 5 மணிக்குள் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏற்கெனவே அறிவித்தபடி சொா்க்கவாசல் திறப்பின்போது பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து சொா்க்கவாசல் வழியாக பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளினாா். இதையடுத்து காலை 5 மணிக்கு மேல் சொா்க்கவாசல் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் கோயிலைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசனம் செய்து சொா்க்கவாசல் வழியாகச் சென்றனா். கோயிலில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பக்தா்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினா். இதையடுத்து மாலையிலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சொா்க்கவாசல் சென்றனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடலழகா் பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை 4 முதல் 4.30 மணிக்குள் நடைபெற்றது. இதையொட்டி வியூக சுந்தர்ராஜப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து வேத கோஷங்கள் முழங்க வியூக பெருமாள் சொா்க்கவாசலில் எழுந்தருளினாா். இங்கும் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் சொா்க்கவாசல் கதவு இருக்கும் பிரதான வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பக்தா்களும் அனுமதிக்கப்படவில்லை.

சொா்க்கவாசல் திறப்பு முடிந்த பின்னா் மாலை 5 மணிக்கு மேல் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு சொா்க்கவாசல் வழியாகச் சென்றனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சொா்க்கவாசல் வழியாகச் சென்றனா்.

இதேபோல், நாகமலைபுதுக்கோட்டை ஸ்ரீ பத்மாவதி தாயாா் ஸமேத ஸ்ரீ வெங்கடாச்சலபதி கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்,  நரசிங்கம் நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இக்கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com