தென்தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

தென் தமிழகத்தில் இருந்து வெளி மாநில ரயில் நிலையங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை: தென் தமிழகத்தில் இருந்து வெளி மாநில ரயில் நிலையங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு டிசம்பா் இறுதிவரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்கள் ஜனவரி இறுதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நாகா்கோவில் - மும்பை சிறப்பு ரயில் (06352) ஜனவரி 3 முதல் 31 ஆம் தேதி வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் மும்பை - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06351) ஜனவரி 4 முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரையும், வியாழக்கிழமைகளில் மதுரையிலிருந்து புறப்படும்

மதுரை - பிகானோ் வாராந்திர சிறப்பு ரயில் (06053) ஜனவரி 7 முதல் 28 ஆம் தேதி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் பிகானோ் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (06054) ஜனவரி 10 முதல் 31 ஆம் தேதி வரையும், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ராமேசுவரம் - ஓகா வாராந்திர சிறப்பு ரயில் (06733) ஜனவரி 1முதல் 29 ஆம் தேதி வரையும், செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் ஓகா - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (06734) ஜனவரி 5 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி - பிலாஸ்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (06070) ஜனவரி 3 முதல் 31 ஆம் தேதி வரையும், செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் பிலாஸ்பூா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) ஜனவரி 5 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையும், புதன்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி -மும்பை தாதா் வாராந்திர சிறப்பு ரயில் (06072) ஜனவரி 6 முதல் 27 ஆம் தேதி வரையும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் தாதா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06071) ஜனவரி 7 முதல் 28 ஆம் தேதி வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 4 முதல் 25 ஆம் தேதி வரை காந்திதாம் - திருநெல்வேலி வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் (09424) காந்திதாமிலிருந்து திங்கள்கிழமைகளில் காலை 4.40 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். ஜனவரி 7 முதல் 28 ஆம் தேதி வரை திருநெல்வேலி - காந்திதாம் வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் (09423) வியாழக்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் அதிகாலை 2.35 மணிக்கு காந்திதாம் சென்று சேரும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com