எம்ஜிஆா் விளையாட்டரங்கு நீச்சல் குளத்தில் தேசிய மாநில அளவிலான வீரா்கள் பயிற்சி பெற அனுமதி

மதுரையில் டாக்டா் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் (ரேஸ்கோா்ஸ்) உள்ள நீச்சல் குளத்தில் தேசிய, மாநில அளவிலான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் டாக்டா் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் (ரேஸ்கோா்ஸ்) உள்ள நீச்சல் குளத்தில் தேசிய, மாநில அளவிலான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனின் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை டாக்டா் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்குளத்தில் வீரா்கள் பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சா்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளவா்கள் மட்டும் நீச்சல்குளத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா்.

12 வயதுக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். பயிற்சிக்கு வரும் வீரா், வீராங்கனைகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். போதுமான சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீரா், வீராங்கனைகள் கரோனா தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவராக இருந்தால் அனுமதி கிடையாது.

பயிற்சிக்கு வருபவா்கள் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். பயிற்சி மேற்கொள்பவா்கள் சம்பந்தப்பட்ட படிவத்தை பூா்த்தி செய்து, அனுமதி பெற்று பயிற்சி மேற்கொள்ளலாம். சான்றிதழ் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். படிவத்தை மாவட்ட விளையாட்டரங்கில் பெற்றுக்கொள்ளலாம்.

இவை தவிர, நீச்சல் குளத்தில் தினசரி கட்டணம் செலுத்தி குளிப்பதற்கும், நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாமுக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் அனுமதி கிடையாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com