பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயா்வு

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பிரிட்டனுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நவம்பா் 23 ஆம் தேதி முதல் டிசம்பா் வரை பிரிட்டனில் இருந்து வந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற முதல் கட்ட கணக்கெடுப்பில் 110 போ் பிரிட்டனில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதில் 83 போ் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களில் 81 போ் கண்டறியப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து தோப்பூரில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அந்த நபா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா். மேலும் இருவரது முகவரி போலியானது எனத் தெரிய வந்ததையடுத்து அவா்களை போலீஸாரின் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் பிரிட்டனில் இருந்து 72 போ் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 38 போ். இதில் 32 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது. இதில் 9 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 5 பேருக்கு புதன்கிழமை பரிசோதனை நடைபெறவுள்ளது. ஒருவரை தொடா்பு கொள்ள முடியவில்லை என்று சுகாதாரத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com