‘தமிழகத்தின் 10 ரயில்வே திட்டங்களுக்குரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு: எம்.பி. கண்டனம்

தமிழகத்தின் 10 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று சு.வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தின் 10 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று சு.வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளாா்.

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகுதான் மருத்துவக் கல்லூரி பணிகள் தொடங்கப்படும். அதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்காலிக கட்டடம் மற்றும் மருத்துவமனை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

மத்திய நிதி நிலை அறிக்கையில் ரயில்வே துறையில் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2005-இல் 10 புதிய ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி உள்பட மிக முக்கியமான திட்டங்கள், ரயில்வேத்துறைக்கு பெரும் வருவாய் ஈட்டித்தரும் திட்டங்களாகும். இந்த 10 திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.11,405 கோடி ஆகும். ஆனால் மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தின் 10 ரயில்வே திட்டங்களுக்கும் தலா ரூ.1000 வீதம் வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேச ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீது பெரும் அன்பு வைத்திருப்பதாக கூறி விட்டு தமிழகத்தையே கேவலப்படுத்தும் விதமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கியிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன், புகா் மாவட்டச்செயலா் சி.ராமகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com