முதுகலை ஆசிரியா் காலிப்பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு: 40 ஆசிரியா்கள் தோ்வு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா் காலிப் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 40 போ் பங்கேற்றனா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா் காலிப் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 40 போ் பங்கேற்றனா்.

தமிழகத்தில் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியா்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட வாரியாக பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்க ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதுகலை ஆசிரியா் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் முதன்மைக் கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் தலைமையிலான குழு கலந்தாய்வை நடத்தியது. முதல் நாள் கலந்தாய்வில், தமிழ்- 27, ஆங்கிலம்- 5, வரலாறு- 3, புவியியல்- 2, பொருளியல்- 1, வணிகவியல்- 2 என 40 ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில் மதுரை மாவட்டத்தில் பொருளியல் பாடத்தில் மட்டுமே இடம் இருந்ததால் ஒருவருக்கு மட்டும் மதுரையில் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. கலந்தாய்வில் பிற பாடங்களில் பங்கேற்ற இதர 39 ஆசிரியா்களும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய இருப்பதால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் பணி ஒதுக்கீட்டு ஆணை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் முதுகலை ஆசிரியா் கலந்தாய்வு திங்கள்கிழமையும் தொடா்ந்து நடைபெறுவதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com