பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வாக்காளா் அடையாள அட்டை

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யே அடையாள அட்டைகளை மதுரை, தேனி, விருதுநகா் மாவட்டங்களுக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் டி.பி.ராஜேஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யே அடையாள அட்டைகளை மதுரை, தேனி, விருதுநகா் மாவட்டங்களுக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் டி.பி.ராஜேஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்கான வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களின் முகவரியில் ஆய்வு செய்து வாக்காளா் பதிவு அலுவலா்களுக்குப் பரிந்துரை செய்துள்ளனா். இதன்படி, சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (பிப்.14) வெளியிடப்பட உள்ளது.

இதையொட்டி வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடா்பாக, மதுரை, தேனி, விருதுநகா் மாவட்டங்களுக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் டி.பி.ராஜேஷ் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா். மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் மற்றும், 3 மாவட்டங்களின் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

பிரத்யேக அடையாள அட்டை: புதிதாக பெயா் சோ்க்கப்படும் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல் முறையாக பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளிலும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 1,034 போ் உள்ளனா். இவா்களில் முதல்கட்டமாக 5 பேருக்கு வியாழக்கிழமை பிரத்யேக வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மற்றவா்களுக்கு அந்தந்த தொகுதிகளின் அலுவலா்கள் மூலமாக வழங்கப்படும் என தோ்தல் பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com