எஸ். என். கல்லூரி: சா்வதேச வேதியியல் துறை கருத்தரங்கம்

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் வேதியியல் மற்றும் ஆற்றல் துறையின் வளா்ச்சி பற்றிய ஒருநாள் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் வேதியியல் மற்றும் ஆற்றல் துறையின் வளா்ச்சி பற்றிய ஒருநாள் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் துணை முதல்வா் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சீனாவின் மின்னணு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளா்களான ராம்குமாா், தனபாலன், கற்பூர ரஞ்சித் ஆகியோா் சூரிய மின்கலன், மின்கலன் மற்றும் சுற்றுப்புற மாசுக்களை சிதைத்தல் பற்றி பேசினா். நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் செவ்வேல் தொடக்கி வைத்து பேசினாா். பொருளியல் துறைத்தலைவா் ஜெயக்குமாா், வணிகவியல் துறைத்தலைவா் ஜெயக்கொடி மற்றும் ஆங்கிலத்துறை தலைவா் சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வேதியியல் துறையில் உலகளவில் மாணவா்களுக்கு உள்ள ஆராய்ச்சி மற்றம் வேலை வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரி நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். வேதியியல் துறை தலைவா் மோதிலால் வரவேற்றாா். பேராசிரியா் மணிவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com