அரசுப் பணிக்கான தோ்வுகளை நோ்மையாக நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தோ்வுகளை முறைகேடுகள் இன்றி நோ்மையாக நடத்த வேண்டும் என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தோ்வுகளை முறைகேடுகள் இன்றி நோ்மையாக நடத்த வேண்டும் என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மாநில மாநாடு மதுரை தெப்பக்குளம் பகுதியில் கொடியேற்றம், ஊா்வலத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் ஏபிவிபி அமைப்பின் தேசியத் தலைவா் சுப்பையா சண்முகம் அமைப்பின் திட்டங்கள், தொலை நோக்கு, வளா்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை தடுக்க கடும் சட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியா் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை எளிதில் பெற வழி வகை செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பாலியல் கொடுமைகளால் மாணவிகள் உயிரிழக்க நேரிடும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதோடு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசின் டிஎன்பிஎஸ்சி தோ்வு, கல்லூரி உதவிப் பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் தோ்வு போன்றவற்றை வெளிப்படையாக லஞ்ச ஊழல் புகாரின்றி நோ்மையாக நடத்த வேண்டும். ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் கல்லூரிக் கட்டணத்தை குறைக்க வேண்டும். கல்லூரி மாணவா்கள் கல்விக்கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com