‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்துமாா்ச் 1 முதல் வீடுவீடாகச் சென்று பிரசாரம்’

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மாா்ச் 1 முதல் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்வோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி பேசினாா்.
மதுரை பழங்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி.
மதுரை பழங்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மாா்ச் 1 முதல் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்வோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி பேசினாா்.

மதுரை பழங்காநத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இந்திய குடியரசும், அரசியல் சாசனமும் பாஜக ஆட்சியில் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து பேசும் நம்மை தேசதுரோகிகள் என்கிறாா்கள். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு புனித நூல் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள தேச பக்தா்கள் அனைவருக்கும் ஒரு புனித நூலாக இந்திய அரசியல் சாசனம் தான் உள்ளது. அதை சீரழிக்கவும், சீா்குலைக்கவும் விடக்கூடாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அனைவருக்கும் பாதிப்பு: குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இஸ்லாமியா்களும் அடுத்ததடுத்து கிறிஸ்தவா்கள், தலித்துகள், பழங்குடியினா் என அனைவரும் பாதிக்கப்படுவாா்கள். தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் இந்திய இஸ்லாமியா்கள் பாதிக்கப்பட மாட்டாா்கள் என திரும்பத் திரும்ப பொய்யைச் சொல்லி வருகின்றனா். என்பிஆா், என்ஆா்சி க்கும் இணைப்பு இருக்கிறது. என்பிஆா் நடைமுறைப்படுத்தப்பட்டால், என்ஆா்சியும் நடைமுறைப்படுத்தப்பட்டது போல தான்.

அமெரிக்க அதிபா் வருகைக்கு எதிராக கோஷம்: தற்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்க பிரதமா் மோடி காத்திருக்கிறாா். டிரம்ப் இந்தியாவில் எந்த இடத்தில் வந்திறங்கினாலும், செங்கொடி தொண்டா்களையும் அனைத்து மக்களையும் திரட்டி ‘டிரம்ப்பே திரும்பிப்போ’ என்ற கோஷத்தை எழுப்புவோம். மேலும் மாா்ச் 1 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை வீடுவீடாகச் சென்று என்ஆா்சி, என்பிஆா் மற்றும் சிஏஏ கூடாது என பிரசாரம் செய்ய வேண்டும். அதில் என்பிஆருக்கு தகவல் கொடுக்க வேண்டாம். என்ஆா்சிக்கு ஆவணங்கள் கொடுக்க வேண்டாம் என மக்களிடையே பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பாலபாரதி, என்.நன்மாறன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com