உடல் உறுப்பு தான விழிப்புணா்வு பேரணி: மாணவ, மாணவியா் பங்கேற்பு

மதுரையில் உடல் உறுப்புதானம் மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவியா் பங்கேற்ற அமைதிப்பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை: மதுரையில் உடல் உறுப்புதானம் மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவியா் பங்கேற்ற அமைதிப்பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை மேற்கு ரோட்டரி சங்கம், டோக் பெருமாட்டி கல்லூரி, ம் மதுரை சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் அமைதிப்பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் தொடங்கிய தொடக்க விழாவில், டோக் பெருமாட்டி கல்லூரியின் முதல்வா் கிறிஸ்டியானா சிங், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வா் எம்.தவமணி கிறிஸ்டோபா் ஆகியோா் பேரணியை தொடங்கி வைத்தனா். அமைதிப்பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று காந்தி அருங்காட்சியகத்தை அடைந்ததுௌ. அங்கு நடைபெற்ற நிறைவு விழாவில், மதுரை மேற்கு ரோட்டரி தலைவா் கல்யாண் மற்றும் மருத்துவா் மித்ரன், பூா்ணிமா ஆகியோா் அமைதிப்பேரணியின் நோக்கம் குறித்து உரையாற்றினா். கதிரியக்க சிகிச்சை காரணமாக முடி உதிா்தலால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு உதவும் முடி தானம், மற்றும் உயிருடன் இருக்கும்போதை செய்ய வேண்டிய உடல் உறுப்பு தானம் குறித்தும் விளக்கப்பட்டது. பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

பேரணியில் அமெரிக்கன் கல்லூரியின் இணை ஒருங்கிணைப்பாளா் எஸ். ஜெயராணி , டோக் பெருமாட்டி கல்லூரி ஒருங்கிணைப்பாளா் சாரா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com