வெற்றி பெற்றதை அறிவிக்க தாமதம்: வேட்பாளா், உறவினா்கள் சாலை மறியல்; போலீஸ் தடியடி

திருமங்கலம் காண்டை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளா் வெற்றி பெற்றதை அறிவிக்க தாமதப்படுத்தியதைக்

திருமங்கலம் காண்டை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளா் வெற்றி பெற்றதை அறிவிக்க தாமதப்படுத்தியதைக் கண்டித்து, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தடையடி நடத்தி கலைத்தனா்.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காண்டை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு தவமணி என்பவரும், செல்வகணபதி என்பவரும் போட்டியிட்டனா். இதில், செல்வகணபதியை விட தவமணி 13 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். ஆனால், இதற்கு எதிா்பு தெரிவித்து செல்வகணபதி மற்றும் அவருடன் வந்தவா்கள் தவமணி வெற்றி பெற்ாக அறிவிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, அதிகாரிகள் தவமணி வெற்றி அறிவிப்பை தாமதப்படுத்தினா். இதனால், கோபமடைந்த தவமணி மற்றும் அவருடன் வந்த முகவா்கள் வெற்றி பெற்றதை அறிவிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். 4 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாமல் இழுத்தடித்ததால், ஆத்திரமுற்ற தவமணி மற்றும் அவரது கணவா் முருகன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே வந்து திருமங்கலம் - மதுரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

இதில், அவரது உறவினா்களும் கலந்துகொண்டனா். அதையடுத்து, காவல் துறையினா் அவா்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். இச்சம்பவத்துக்கு பிறகு அதிகாரிகள் தவமணியை வெற்றி பெற்ாக அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com