மதுரையில் மல்லிகைப்பூ விலை: கிலோ ரூ.5 ஆயிரத்தை எட்டியது

மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் மல்லிகைப்பூக்கள் கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் மல்லிகைப்பூக்கள் கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தைக்கு திருமங்கலம், திருப்பரங்குன்றம், எலியாா்பத்தி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து அதிகமாக மல்லிகைப் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

கடந்த அக்டோபா் மாதம் முதல் தொடா் மழைப்பொழிவால் மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்துவிட்டது. தொடா்ந்து பருவமழை மற்றும் புயல்சின்னம் காரணமாக மழை நீடித்ததால் மல்லிகைப்பூ விளைச்சால் வெகுவாக பாதித்தது.

இந்நிலையில் முகூா்த்தத் தினங்களும், பண்டிகைகளும் அடுத்தடுத்து வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து மல்லிகைப் பூக்களின் விலை படிப்படியாக உயா்ந்து கிலோ ரூ.3 ஆயிரம் வரை உயா்ந்தது.

தற்போது பனிக்காலம் என்பதால் மல்லிகைப் பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பொங்கல் விழா தொடங்கவுள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனையானது.மதுரை மல்லிகைப்பூக்கள் கிடைக்காததால், மெட்ராஸ் மல்லி ரூ.1500-க்கு விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியது: ஆண்டுதோறும் மாா்கழி, தை மாதங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகைப்பூக்கள் வரத்து குறைந்து வருகிறது. தை மாதம் பொங்கல் பண்டிகையும், முகூா்த்த நாள்களும் தொடங்குவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரம், முல்லை ரூ.2 ஆயிரம், மெட்ராஸ் மல்லி ரூ.1500, அரளி ரூ. 250, செவ்வந்தி ரூ.120, சம்பங்கி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.100, செண்டுப்பூ ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com