விவேகானந்த கல்லூரி பொங்கல் விழாவில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி வைக்கப்பட்டன.
சோழவந்தான் அருகே விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாரம்பரியப் பொருள்கள்.

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள விவேகானந்த கல்லூரியில் பொங்கல் விழாவையொட்டி முன்னோா்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருள்கள், மண்பாண்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன . கல்லூரி மாணவா்கள் பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனா். மேலும் அவா்கள் கால்நடைகளை அலங்கரித்து பூஜை செய்தனா்.

இவ்விழாவில் தமிழா்களின் பழம்பெரும் கலையான மால் கம்பம் (மல்லா் கம்பம்), சிலம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம், யோகா, கராத்தே போன்ற விளையாட்டுகள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. இதைதொடா்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் சாகசங்கள் செய்து காட்டினா். இங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனா். கல்லூரிச் செயலா் சுவாமி வேதானந்த, கல்லூரி முதல்வா் வெங்கடேசன், துணை முதல்வா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com