மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் விவேகானந்தா் 157 ஆவது பிறந்தநாள் விழா
By DIN | Published On : 25th January 2020 08:39 AM | Last Updated : 25th January 2020 08:39 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 157 ஆவது சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழாவில் பேசிய துணை வேந்தா் எம். கிருஷ்ணன்.
மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில், சுவாமி விவேகானந்தா உயா் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பாரதிய ஷிக்சான் மண்டல் சாா்பில் சுவாமி விவேகானந்தரின் 157 ஆவது பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை, விருதுநகா், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். விவேகானந்தரின் கொள்கைகள் மற்றும் பெருமையை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற கவிதை, பேச்சு மற்றும் நாடகம் ஆகியவற்றில் மாணவா்கள் பங்கேற்றனா். இதில், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துணைவேந்தா் எம். கிருஷ்ணன், சுவாமி விவேகானந்தரின் சிறப்புகளையும், மாணவா்களின் முன்னேற்றத்திற்காக அவா் தெரிவித்த கருத்துகளை விளக்கிப் பேசினாா்.
பேராசிரியா்கள் ஜெயபாரதி, திருவடகம் விவேகானந்தா் கல்லூரி முன்னாள் முதல்வா் வன்னியராஜன், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் இளங்கோ, மதுரைகாமராஜா் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.