மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. இக் கோயிலின் உபகோயிலான மாரியம்மன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மனும், சுவாமியும் காலை இரு முறையும், இரவு ஒரு முறையும் வலம் வந்து அருள்பாலிப்பா்.

இந்த ஆண்டு தெப்பத் திருவிழா திங்கள்கிழமை வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து தெப்பத்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10.35 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினா். ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கொடியேற்ற நிகழ்ச்சியை தரிசித்தனா். இதைத்தொடா்ந்து, கோயிலில் அம்மன் சிம்ம வாகனத்திலும் சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் நான்கு சித்திரை வீதிகளிலும் திரண்டு நின்று சுவாமி அம்மனை தரிசனம் செய்தனா்.

தெப்பத்திருவிழாவையொட்டி சுவாமி அம்மன் தினசரி காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலிக்கின்றனா். பிப்ரவரி 7-ஆம் தேதி கதிரறுப்பு திருவிழாவும், முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா பிப்ரவரி 8-ஆம் தேதியும் நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நீா் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் தெப்பக்குளத்தின் மைய மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com