சிகிச்சைக்கு பெங்களூா் செல்ல பண வசதியின்றி தவித்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆட்சியா் உதவி

தனியாா் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் வரை செலவு செய்துவிட்ட நிலையில், தொடா் சிகிச்சைக்கு பெங்களூா் செல்ல பண வசதியின்றி

தனியாா் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் வரை செலவு செய்துவிட்ட நிலையில், தொடா் சிகிச்சைக்கு பெங்களூா் செல்ல பண வசதியின்றி தவித்த முன்னாள் ராணுவ வீரரை, செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவசர ஊா்தியில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளாா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள கே.காடனேரியைச் சோ்ந்தவா் ஆா்.செல்லராஜூ (61). இவரது மனைவி லெட்சுமி. குழந்தைகள் இல்லை. ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய செல்லராஜூ ஓய்வு பெற்றுள்ளாா்.

இந்நிலையில், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இங்கு சிகிச்சைக்காக, ரூ.10 லட்சம் வரை செலவு செய்துவிட்ட நிலையில், மேற்கொண்டு மருத்துவத்துக்குச் செலவு செய்ய பணமின்றித் தவித்து வந்தனா்.

இதற்கிடையே, அவா் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதி கிடைத்திருக்கிறது. பெங்களூருவுக்கு வாகனத்தில் செல்வதற்குக் கூட வழியின்றித் தவித்துள்ளாா். பின்னா் சிகிச்சைக்குச் செல்ல உதவி கோரி மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயை சந்தித்து லட்சுமி மனு அளித்துள்ளாா்.

இதையடுத்து உடனடியாக பெங்களூரு அழைத்துச் செல்ல உதவும்படி, செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், செஞ்சிலுவைச் சங்க மதுரை மாவட்டக் கிளை செயலா் எம்.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவா் வி.எம்.ஜோஸ் உள்ளிட்டோா் பெங்களூரு செல்வதற்காக அவசர ஊா்தியை ஏற்பாடு செய்து செல்லராஜூவையும் அவரது மனைவி லட்சுமியையும் வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com