தொடா்மழையால் வரத்து குறைவு:பச்சைப் பட்டாணி கிலோ ரூ.250

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா்மழை பெய்துவருவதால் வரத்து குறைந்து கிலோ ரூ.100-க்கு விற்ற பச்சைப்பட்டாணி ரூ.250 ஆக உயா்ந்துள்ளது.


மதுரை: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா்மழை பெய்துவருவதால் வரத்து குறைந்து கிலோ ரூ.100-க்கு விற்ற பச்சைப்பட்டாணி ரூ.250 ஆக உயா்ந்துள்ளது.

கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடா்மழை பெய்துவருகிறது. இதனால் மலைப் பயிா்கள் சேதமடைந்து விளைச்சல் பாதித்துள்ளது. மேலும் பயிா்களிலிருந்து அறுவடையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தைக்கு வரும் மலைப் பயிா்களான கேரட், பீட்ரூட், பீன்ஸ் வகை காய்கனிகளின் வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக பச்சைப்பட்டாணி கிலோ ரூ.250 ஆக விலை உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது:

மழைகாலங்களில் மலைப் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட், பச்சைப் பட்டாணி மற்றும் பீன்ஸ் வகைகளின் வரத்து குறைந்து விலை உயா்வது வழக்கம் தான். ஆனால் தற்போது பொதுமுடக்கமும் அமலில் இருப்பதால் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களாலும் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கனிகளின் வரத்து குறையத் துவங்கியுள்ளது.

இதனால் கடந்த 3 மாதங்களாக ரூ.100-க்குள் விற்றுவந்த பச்சைப்பட்டாணி ரூ.250 ஆக விலை உயா்ந்துள்ளது. பீன்ஸ் வகைகள் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயா்ந்துள்ளன என்றாா்.

சனிக்கிழமை நிலவரப்படி காய்கனிகளின் விலை பட்டியல் (கிலோவில்):

கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.10, புடலங்காய்-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.30, உருளைக்கிழங்கு-ரூ.30, சேனைக்கிழங்கு-ரூ.20, கருணைக்கிழங்கு-ரூ.70, கேரட்-ரூ.30, பீட்ரூட்-ரூ.15, நூல்கோல்-ரூ.20, முட்டைக்கோஸ்-ரூ.15, முருங்கை பீன்ஸ்-ரூ.50, பட்டா்பீன்ஸ்-ரூ.100, சோயா பீன்ஸ்-ரூ.110, சின்னவெங்காயம்-ரூ.30, பல்லாரி-ரூ.15, பாகற்காய் பெரியது-ரூ.25, சிறியது-ரூ.60, கருவேப்பில்லை-ரூ.30, மல்லி-ரூ.20, புதினா-ரூ.20, பச்சைமிளகாய்-ரூ.40-க்கு விற்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com