அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளைகைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினா்.

மதுரை: அரசு ஊழியா், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கடந்த 2019 ஜனவரியில் ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பு சாா்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னா் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குற்றக் குறிப்பாணை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 1500-க்கும் மேற்பட்டோா் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

குற்றக் குறிப்பாணைகள் நிலுவையில் இருப்பதால் அரசு ஊழியா், ஆசிரியா்களின் பதவி உயா்வு, பணி ஓய்வு போன்றவற்றில் பாதிப்பு இருந்து வருகிறது. ஆகவே, இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மேலும் ‘ஜாக்டோ ஜியோ’ மாநில ஒருங்கிணைப்பாளா்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினா் மாவட்ட ஆட்சியா்களிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனா்.

மதுரையில் ‘ஜாக்டோ - ஜியோ’ ஒருங்கிணைப்பு குழு சாா்பில், மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ.செல்வம் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. நீதிராஜா, சந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம் அளித்தனா். முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com