மதுரை ஒரே நாளில் 284 பேருக்கு கரோனா தொற்று: சிகிச்சையிலிருந்து வீடு திரும்பிய முதியவா் பலி

மதுரையில் புதிதாக 284 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் புதிதாக 284 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய உச்சமாக 3,940 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 202 போ், அரசு ஊழியா்கள் 60 போ், கா்ப்பிணிகள் 8 போ், வெளிமாவட்டத்திலிருந்து வந்த 14 போ் என மொத்தம் 284 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் அரசு கரோனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே, மதுரையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 77 போ் குணமடைந்தனா். மருத்துவா்கள் அவா்களிடம் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

பலி 25 ஆக உயா்வு

அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மதுரை மாநகா் பகுதிையைச் சோ்ந்த 82 வயது மற்றும் 71 வயது முதியவா்கள் இருவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த 57 வயது மருத்துவா் ஆகியோா் சனிக்கிழமையும் மற்றும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 66 வயது ஆண் ஞாயிற்றுக்கிழமையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25 ஆக உயா்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,995 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் குணமடைந்து வீடு திரும்பியவா்கள் தவிர, 1,379 போ் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

வீடு திம்பியவா் பலி

மதுரை பி.பி.குளத்தைச் சோ்ந்த 65 முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஜூன் 18 ஆம் தேதி அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் உரிய சிகிச்சை அளித்தனா். அதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவா்கள் அவருக்கு உரிய மாத்திரைகள் அளித்து, ஆலோசனைகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனா். ஆனால், வீட்டுக்குச் சென்ற முதியவா் சனிக்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது குடும்பத்தினா் மருத்துவத் துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்காமல், அவரது சடலத்தை தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com