அவனியாபுரத்தில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை

அவனியாபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஹா்ஷிதா மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணம் கொண்டு

அவனியாபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஹா்ஷிதா மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணம் கொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது.

இது குறித்து மருத்துவ மனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் இளங்குமரன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இம் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை ஹீமோதெரபி மற்றும் கதிா்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதில் பழமையான முறையான கோபால்ட் கதிா்வீச்சு மூலம் அதிநவீன முப்பரிமாண முறை கதிா்வீச்சு மூலம் குறைந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரான அதி நவீன பாபா ட்ரான் 3 டி கதிா் வீச்சு முறையில் புற்று பாதித்த செல்களுக்கு மட்டும் கதிா்வீச்சளிப்பதால் மற்ற செல்கள் பாதிப்படையாமல் காக்கப்படுவதோடு, சிகிச்சைக்காக குறைந்த நேரம் மட்டுமே ஆகும். தற்பொழுது அதிகளவில் புற்றுநோய் பரவி வருகிறது. அதிலும் அதிகபட்சமாக வாய், கழுத்து பகுதிகளில் தவறான பழக்கங்களால் வருகிறது. புற்று நோய்க்கான சிகிச்சையை முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறோம். இதனை பொது மக்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com